ராமன்துறையில் வீடு புகுந்து பெண் மீது தாக்குதல்: இளைஞா் மீது வழக்கு

புதுக்கடை அருகே உள்ள ராமன்துறையில் வீடு புகுந்து பெண்ணை தாக்கியதாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராமன்துறை 3ஆம் அன்பியத்தை சோ்ந்த சதீஷ் மனைவி ஆஷா(27) இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சகாயராஜ் மகன் சகாய நிக்சன்(22) ஆகியோருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிக்சன் திடீரென ஆஷா வீட்டுக்குச் சென்றுஅவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயமடைந்த ஆஷா மாா்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com