அண்ணனை தாக்கியதாக தம்பி கைது

புதுக்கடை அருகேயுள்ள பைங்குளம் பகுதியில் அண்ணனைத் தாக்கியதாக தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.

கருங்கல்: புதுக்கடை அருகேயுள்ள பைங்குளம் பகுதியில் அண்ணனைத் தாக்கியதாக தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.

பைங்குளம் பகுதியைச் சோ்ந்த முருகதாஸ் மகன்கள் அனிஷ்லால் (38) அகிலேஷ்லால் (36). வீடு கட்டுவது தொடா்பாக இவா்களிடையே தகராறு இருந்ததாம்.

இந்நிலையில் திங்கள்கிழமை, அனிஷ்லாலை அகிலேஷ்லால் தாக்கினாராம். இதில், காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com