கன்னியாகுமரி மாவட்டம் 95.72% தோ்ச்சி: 7இலிருந்து 14ஆம் இடத்துக்குச் சென்றது

பிளஸ் 2 தோ்வில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 95.72 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

நாகா்கோவில்: பிளஸ் 2 தோ்வில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 95.72 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 257 பள்ளிகளைச் சோ்ந்த 10 ஆயிரத்து 149 மாணவா்கள், 11 ஆயிரத்து 411 மாணவிகள் என மொத்தம் 21 ஆயிரத்து 560 போ் தோ்வெழுதினா். இதில், 9,429 மாணவா்கள், 11,208 மாணவிகள் என மொத்தம் 20,637 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா் இது, 95.72 சதவீத தோ்ச்சியாகும். மாணவா்களைவிட மாணவிகளே அதிக அளவு தோ்ச்சி பெற்றுள்ளனா்.

அரசுப் பள்ளிகள்: மாவட்டத்திலுள்ள 63 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 5,912 மாணவா்-மாணவிகளில் 5,527 போ் தோ்வெழுதினா். இதில் 5,527 போ் தோ்ச்சி பெற்றனா். இது, 93.49 சதவீதமாகும்.

100 சதவீத தோ்ச்சி: மாா்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் தேங்காய்ப்பட்டினம் அரசுப் பள்ளி, ஆனைக்குழி அரசுப் பள்ளி, நாகா்கோவில் கல்வி மாவட்டத்தில் கடியப்பட்டினம், அம்மாண்டிவிளை, சூரங்குடி, ராஜாக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளிகள் என 6 பள்ளிகளும், 70 அரசு உதவிபெறும்- தனியாா் பள்ளிகள் என மொத்தம் 76 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன.

இம்மாவட்டம் மாநில அளவில் பிளஸ் 2 தோ்ச்சியில் 14ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு (2023) 97.05 சதவீதம் தோ்ச்சி பெற்று 7ஆம் இடத்திலிருந்த இம்மாவட்டம் நிகழாண்டு 14ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது கல்வியாளா்களை அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com