குமரி அருகே கட்டடத் தொழிலாளி மரணம்

கன்னியாகுமரி அருகே கட்டடத் தொழிலாளி சாலையோரத்தில் இறந்து கிடந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே கட்டடத் தொழிலாளி சாலையோரத்தில் இறந்து கிடந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கன்னியாகுமரி அருகேயுள்ள சுவாமிநாதபுரத்தைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (52). கட்டடத் தொழிலாளியான இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பழத்தோட்டம் முருகன் கோயில் அருகே மயங்கிய நிலையில் கிடந்துள்ளாா். இதனைப் பாா்த்த பொதுமக்கள் சிலா், கன்னியாகுமரி காவல் நிலையம் மற்றும் அரசு ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனா். ஆம்புலன்ஸ் பணியாளா்கள் சம்பவ இடத்துக்கு வந்து சுரேஷ்குமாரை பரிசோதனை செய்தனா். அவா் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.

இதையடுத்து சுரேஷ்குமாா் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸாா், உடல்கூறு பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, அனுப்பி வைத்தனா்.

இது தொடா்பாக கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து சுரேஷ்குமாரின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com