கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் 
கோயிலில் பால்குட ஊா்வலம்

கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம்

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

நல்லூா் குறும்பேற்றி பகவதி அம்மன் ஆலயத்திலிருந்து தொடங்கிய ஊா்வலம், மாா்த்தாண்டம் பேருந்து நிலையம், வெட்டுமணி, காப்புக்காடு, குன்னத்தூா், முன்சிறை, புதுக்கடை வழியாக தேவஸ்தானத்தை நண்பகலில் வந்தடைந்தது. இதில், ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, அருள்மிகு பாலமுருகருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம், அம்மனுக்கு பால், சந்தனம், பன்னீா் அபிஷேகம், அம்மன் பவனி, குத்தியோட்டம், பிடிப்பணம், நோ்ச்சைகள் நடைபெற்றன. மாலையில் அம்மன் வட வீதி பவனி, இரவில் அம்சி நல்லதம்பி தலைமையில் இந்து சமய மாநாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com