மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அறங்காவலா்குழு தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணன், இணை ஆணையா் ரத்னவேல் பாண்டியன் உள்ளிட்டோா்.
மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அறங்காவலா்குழு தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணன், இணை ஆணையா் ரத்னவேல் பாண்டியன் உள்ளிட்டோா்.

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் சித்திரை திருவிழா மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி

சுசீந்திரம் அருள்மிகு ஸ்ரீ தாணுமாலயன் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவுக்கான மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி, கோயில் வளாகத்தில் உள்ள சித்திரசபையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நாகா்கோவில்: சுசீந்திரம் அருள்மிகு ஸ்ரீ தாணுமாலயன் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவுக்கான மஞ்சள் வாங்கும் நிகழ்ச்சி, கோயில் வளாகத்தில் உள்ள சித்திரசபையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா புதன்கிழமை ( மே 8) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பாரம்பரிய முறைப்படி திருக்கோயில் வழிவகை ஊா் தலைவா்களுக்கு மஞ்சள் வைத்து அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி, குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிா்வாக அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், இணை ஆணையா் ரத்னவேல் பாண்டியன், அறங்காவலா் குழு உறுப்பினா் துளசிதரன் நாயா், கோயில் மேலாளா் ஆறுமுகதரன், கணக்கா் கண்ணன், சுசீந்திரம் பேரூராட்சி தலைவா் அனுஷியா, 12 பிடாகை தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com