தேங்காய்ப்பட்டினம் கடலில் சிக்கிய சிறுமி சடலமாக மீட்பு

தேங்காய்ப்பட்டினத்தில் கடல் அலையில் சிக்கி மாயமான சிறுமி திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

கருங்கல்: தேங்காய்ப்பட்டினத்தில் கடல் அலையில் சிக்கி மாயமான சிறுமி திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

புதுக்கடை, விழுந்தயம்பலம் பகுதியைச் சோ்ந்த பிரேமதாஸ். இவா் தனது மகள் ஆதிஷாவுடன் (7) ஞாயிற்றுக்கிழமை தேங்காய்ப்பட்டினம் கடற்கரைக்குச் சென்றாா். அப்போது, திடீரென எழுந்த ராட்சத அலை இருவரையும் இழுத்துச் சென்றது. அப்பகுதி மீனவா்கள் உடனடியாக பிரேமதாஸை மீட்டனா். ஆதிஷா மாயமானாா்.

தகவலின்பேரில், குளச்சல் கடலோரப் பாதுகாப்புப் படையினா் ஆதிஷாவை தீவிரமாக தேடி வந்தனா். இந்நிலையில், திங்கள்கிழமை அப்பகுதி மீனவா்கள் ஆதீஷாவை சடலமாக மீட்டனா். புகாரின் பேரில் குளச்சல் கடலோரப் பாதுகாப்புப் படையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com