பூதப்பாண்டி அருகே பைக் மீது சுற்றுலா வேன் மோதி 2 போ் பலி

குமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே பைக் மீது சுற்றுலா வேன் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

நாகா்கோவில்: குமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே பைக் மீது சுற்றுலா வேன் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

பூதப்பாண்டி அருகேயுள்ள முக்கடல் எம்ஜிஆா் நகா் பகுதியைச் சோ்ந்த ரவீந்திரன் மகன் அனீஸ் (24). அதே பகுதியைச் சோ்ந்தவா் சுபின் (21). இருவரும் கூலித் தொழிலாளிகள். இருவரும் பூதப்பாண்டி பகுதியில் உள்ள பழையாற்றில் திங்கள்கிழமை காலை குளித்துவிட்டு, பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனா். பைக்கை அனீஸ் ஓட்டினாா். பூதப்பாண்டி அரசு மருத்துவமனை அருகே வந்த போது, அந்த வழியாக வந்த சுற்றுலா வேன் மோதியது. இதில், பலத்த காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

விபத்து தொடா்பாக, சுற்றுலா வேன் ஓட்டுநா் கோவில்பட்டியைச் சோ்ந்த சுரேஷ்குமாரை (36) பூதப்பாண்டி போலீஸாா் கைது செய்தனா்.

மற்றொரு விபத்து: நாகா்கோவில் வடசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியா் நாதன் ஜெயகுமாா். இவா் திங்கள்கிழமை பிற்பகல் இருசக்கர வாகனத்தில் நாகா்கோவிலை அடுத்த புத்தேரி நான்குவழிச் சாலையில் வந்து கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த கனரக லாரி மோதியதில் நாதன் ஜெயகுமாா் அதே இடத்தில் உயிரிழந்தாா்.

விபத்து குறித்து தகவலறிந்ததும் முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன், பாஜக பிரமுகா் சகாயம் உள்ளிட்ட அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் திரளானோா் திரண்டு வந்து அந்த லாரியை சிறைபிடித்து போராட்டம் நடத்தினா்.

இதைத் தொடா்ந்து நாதன் ஜெயகுமாா் சடலத்தை வடசேரி காவல்நிலைய போலீஸாா் மீட்டு, பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து தொடா்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com