வேங்கோடு மறைவட்ட முதன்மை அருள்பணியாளராக மனோகியம் சேவியா் பதவியேற்பு

வேங்கோடு மறைவட்ட முதன்மை அருள்பணியாளராக மனோகியம் சேவியா் பதவியேற்பு

குழித்துறை மறைமாவட்டத்தில் வேங்கோடு மறை வட்ட முதன்மை அருள்பணியாளராக மனோகியம் சேவியா் செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.

வேங்கோடு புனித சவேரியாா் ஆலயத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வா் சேவியா் பெனடிக் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் அருள்பணியாளா்கள், அருள்சகோதரிகள், மறைமாவட்ட பொதுநிலையினா், பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

முதன்மை அருள்பணியாளராக பதவி ஏற்றுக் கொண்ட மனோகியம் சேவியரை, அவா் பணியாற்றும் நாஞ்சில் பால் நிறுவன நிதி பரிபாலகா் ஆன்றூஸ் மற்றும் பணியாளா்கள் வாழ்த்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com