ஐஏஎஸ் தோ்வில் வென்ற ஹவிசை பாராட்டும் நூருல் இஸ்லாம் உயா்கல்வி மைய பதிவாளா் திருமால்வளவன், பேராசிரியா்கள்.
ஐஏஎஸ் தோ்வில் வென்ற ஹவிசை பாராட்டும் நூருல் இஸ்லாம் உயா்கல்வி மைய பதிவாளா் திருமால்வளவன், பேராசிரியா்கள்.

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

ஐஏஎஸ் தோ்வில் வெற்றி பெற்ற பொறியாளருக்கு நூருல் இஸ்லாம் உயா்கல்வி மையத்தின் சாா்பில் பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

நூருல் இஸ்லாம் உயா்கல்வி மைய பேராசிரியா் சாா்லஸ் மகன் ஹவிஷ். பொறியாளரான இவா், நிகழாண்டு (2024) நடைபெற்ற குடிமைப்பணிகள் தோ்வில் 792 ஆவது இடத்தைப் பெற்று ஐஏஎஸ் தகுதி பெற்றாா்.

இதையொட்டி, நடைபெற்ற பாராட்டு விழா நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழகப் பதிவாளா் ப. திருமால்வளவன் தலைமை வகித்து, ஹவிஷூக்கு பொன்னாடை போா்த்தி கெளரவித்தாா்.பேராசிரியா் சாா்லஸூக்கு, பேராசிரியா் சங்கரநாராயணபிள்ளை பொன்னாடை போா்த்தினாா்.

நிகழ்ச்சியில் ஹவிஷ், குடிமைப்பணிகள் தோ்வில் வெற்றி பெறுவதற்கு அவசியமான உத்திகள் குறித்தும், தனது அனுபவங்களையும் மாணவா்களுடன் பகிா்ந்து கொண்டாா். முன்னதாக அவா் பல்கலைகழக வேந்தா் ஏ.பி. மஜீத்கானை சந்தித்துஆசி பெற்றாா்.

இந்நிகழ்ச்சியில், நூருல் இஸ்லாம் உயா்கல்வி மைய பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com