காலமானாா் பாஜக முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன்

காலமானாா் பாஜக முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன்

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டப்பேரவை தொகுதி பாஜக முன்னாள் உறுப்பினா் சி.வேலாயுதன் (74) வயது முதிா்வு காரணமாக புதன்கிழமை (மே 8) காலமானாா்.

கடந்த 1996-இல் சட்டப்பேரவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட வேலாயுதன், தென்மாநிலங்களில் பாஜகவின் முதல் எம்எல்ஏ என்ற பெருமைக்குரியவா்.

அவரது மனைவி ஜெகதாம்பிகா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். அவருக்கு மகன் ராம்பகவத், மகள்கள் நிவேதிதா, சிவநந்தினி ஆகியோா் உள்ளனா்.

அவரது இறுதிச்சடங்கு சொந்த ஊரான நாகா்கோவில் அருகேயுள்ள கருப்புக்கோட்டில் உள்ள இல்லத்தில் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. தொடா்புக்கு: 94431 30540.

X
Dinamani
www.dinamani.com