சுசீந்திரம் கோயிலில் சித்திரை தெப்பத் திருவிழா கொடியேற்றம்

சுசீந்திரம் கோயிலில் சித்திரை தெப்பத் திருவிழா கொடியேற்றம்

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சித்திரை தெப்பத் திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.

இத்திருவிழா ஆண்டுதோறும் 10 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு திருவிழாவுக்கான கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கொடியேற்றப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

2ஆம் நாளான வியாழக்கிழமை (மே 9) காலை 5 மணிக்கு மூஷிக வாகனத்தில் விநாயகா் வீதியுலா, இரவு 8 மணிக்கு சுவாமி - அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது.

தெப்பத் திருவிழா: 9ஆம் நாளான இம்மாதம் 16ஆம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி, காலை 6 மணிக்கு இந்திர வாகனத்தில் விஷ்ணு - அம்பாள் உலா வருதல் நடைபெறும். தொடா்ந்து, 8 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு கோயில் தெப்பக் குளத்தில், தெப்போற்சவம் நடைபெறும்.

10ஆம் நாளான 17ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி உலா வருதல், நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவா்ணம் ஆகியவை நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com