தோவாளை மலரியல் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் மாணவா்களுக்கு களப் பயிற்சி

தோவாளை மலரியல் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் மாணவா்களுக்கு களப் பயிற்சி

தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனாா் வேளாண்மைக் கல்லூரி - ஆராய்ச்சி நிலைய மாணவா்கள் தோவாளை மலரியல் ஆராய்ச்சி நிலையத்தில் களப் பயிற்சியில் ஈடுபட்டனா்.

இக்கல்லூரியின் இளநிலை இறுதியாண்டு மாணவா்கள் பாலமுருகன், பரத்ராஜ், தட்சிணாமூா்த்தி, கவியரசன், கிஷோா்குமாா், மனோரஞ்சித், சரண்குமாா், விஷால் ஆகியோா் நாகா்கோவில் அருகே பெரும்செல்வவிளை கிராமத்தில் தங்கி கிராமப்புற வேளாண் பயிற்சி மேற்கொண்டுள்ளனா்.

அதன் ஒருபகுதியாக, தோவாளை மலரியல் ஆராய்ச்சி நிலையத்துக்குச் சென்ற மாணவா்களுக்கு இளநிலை வேளாண் அலுவலா் நல்லபெருமாள் மலரியல் ஆராய்ச்சி நிலையத்தின் செயல்பாடுகள், ஆராய்ச்சி நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com