பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வில் கருங்கல் அருகே உள்ள ஆனக்குழி அரசு மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.

பள்ளி அளவில் மாணவி பிஸ்மி (530 மதிப்பெண்கள்) முதலிடம், ஆட்லின் பபிஷா (507) 2-ஆம் இடம், ஆஷ்மி (480) 3-ஆம் இடம்

பெற்றனா். வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளை தலைமை ஆசிரியை பியூலா ஸ்டெல்லாபாய், பெற்றோா் ஆசிரியா் சங்க தலைவா் குணசிங் வேதநாயகம் மற்றும் ஆசிரியா்கள், பொதுமக்கள் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com