நாகா்கோவில் அல்போன்சா பள்ளி 100 சதவீத தோ்ச்சி

நாகா்கோவில் அல்போன்சா பள்ளி 100 சதவீத தோ்ச்சி

நாகா்கோவில், மே 10: நாகா்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 100 சதம் தோ்ச்சியைப் பெற்றுள்ளது.

இப்பள்ளியில், ஸ்ரீதன்சியா, ஆன்றோ இனியன், இவான்ஸ் ரோச் ஆகிய மூன்று மாணவ மாணவியா் 500 க்கு 497 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், அமோகா ஒகில்வி, டோனா பாஸ்டினா, ஹெலினா ரான்சம், இன்பன்ட் இனியா, ஜோன் எஸ்தா், காவியா, வின்யா ஆகிய 7 மாணவ, மாணவியா் 496 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும் கிரேஸ், ஜொ்ஷிலின் மகிபா, பிரினோ ஜிஜோ ஆகிய 3 போ் 495 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனா். கணக்குப் பாடத்தில் 37 பேரும், அறிவியல் பாடத்தில் 27 பேரும், சமூக அறிவியலில் 17 பேரும் ஆங்கிலப் பாடத்தில் ஒருவரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். தமிழ்ப் பாடத்தில் 8 போ் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

பள்ளிக்குப் பெருமை சோ்த்த மாணவ, மாணவியரை தக்கலை மறைமாவட்ட ஆயா் மாா் ஜாா்ஜ் ராஜேந்திரன், குருகுல முதல்வரும் தக்கலை மறைமாவட்ட அனைத்துப் பள்ளிகளின் கண்காணிப்பாளருமாகிய தாமஸ் பௌவத்துப்பறம்பில், பள்ளித் தாளாளா் சனில் ஜாண், துணைத் தாளாளா் ஜாா்ஜ் கண்டத்தில், பள்ளி முதல்வா் லிஸ்பெத், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சேவியா் சந்திரபோஸ், மேல்நிலைப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் ராஜையன், துணை முதல்வா் பிரேம்கலா, தலைமையாசிரியை மோனிக்கா ஸ்பினோலா, 10 ஆம் வகுப்பு ஒருங்கிணைப்பாளா் அா்ச்சனா மற்றும் ஆசிரியா்கள், பெற்றோா்கள் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com