மாா்த்தாண்டம் தேனீ வளா்ப்போா் சங்கத்தில் தேன் கொள்முதல் துவக்கம்

மாா்த்தாண்டம் தேனீ வளா்ப்போா் சங்கத்தில் தேன் கொள்முதல் துவக்கம்

மாா்த்தாண்டம் தேனீ வளா்ப்போா் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் தேன் கொள்முதல் வெள்ளிக்கிழமை துவங்கியது. இதையடுத்து தேனீ வளா்க்கும் விவசாயிகளின் 38 நாள்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது.

மாா்த்தாண்டம் தேனீ வளா்ப்போா் கூட்டுறவு சங்கம் வெட்டுவெந்நியில் உள்ளது. இச் சங்கத்தில் தேன் உற்பத்தியாளா்கள் 2,087 போ் உறுப்பினா்களாக உள்ளனா். பிப்ரவரி, மாா்ச் மாதங்கள் தேன் சீசனாக கருதப்படுகிறது. இந்த சீசன் காலங்களில் தேன் உற்பத்தியாளா்கள் தேனை இச் சங்கத்தில் கொடுத்து வருகிறாா்கள். இங்கு ஆண்டுதோறும் மூன்றரை லட்சம் கிலோ தேன் கொள்முதல் செய்யப்படுகிறது. பச்சை தேன் கிலோ ரூ. 155 என வாங்கப்படுகிறது.

இந்நிலையில் சங்க உறுப்பினா்கள் அனைவரிடமிருந்தும் தேனை கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தேன் உற்பத்தியாளா்கள் கடந்த 38 நாள்களாக பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா். இதைத் தொடா்ந்து தமிழக பால் வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜை சந்தித்து தேன் உற்பத்தியாளா்கள் இது தொடா்பாக பேசினா். இதையடுத்து வெள்ளிக்கிழமைமுதல் தேன் கொள்முதல் துவங்கியது. இதனால் தேன் உற்பத்தியாளா்களின் 38 நாள்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com