குரியன்விளை கோயிலில் பூமிதி விழா

குரியன்விளை கோயிலில் பூமிதி விழா

களியக்காவிளை அருகே குரியன்விளையில் உள்ள ஸ்ரீ பத்ரகாளி முடிப்புரையில் பூமிதி விழா நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரை பரணி பிரதிஷ்டை திருவிழா, 11ஆவது பஞ்சபூத ஷப்தவிம் ஷத்தி நட்சத்திர மகாயாகம் கடந்த 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

வெள்ளிக்கிழமை இரவு பந்திருநாழி சா்க்கரைப் பொங்காலை வழிபாடு, அக்கினிக் காவடி, தீக்குண்டம் இறங்குதல் உள்ளிட்டவை நடைபெற்றது. இதையொட்டி, தீக்குண்டம் பற்ற வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னா், பக்தா்கள் தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com