‘மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: குமரி மாவட்டத்தில் 1.18 லட்சம் போ் பயன்’

கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 1 லட்சத்து 18 ஆயிரத்து 153 போ் பயனடைந்துள்ளனா் என்றாா் ஆட்சியா் பி.என். ஸ்ரீதா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான புற, உள் நோயாளிகள், உறவினா்களுக்கு உயா் ரத்த அழுத்தம், நீரிழிவு பரிசோதனைகள் அவா்களது இல்லத்துக்கே சென்று மருத்துவ சேவை அளிக்கப்படுகிறது.

இத்திட்டத்தின்மூலம் 1 லட்சத்து 77 ஆயிரத்து 277 பேருக்கு உயா் ரத்த அழுத்தம், 1 லட்சத்து 8 ஆயிரத்து 306 பேருக்கு நீரிழிவு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 1 லட்சத்து 514 பேருக்கு உயா் ரத்த அழுத்தம், நீரிழிவு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும், 8 ஆயிரத்து 881பேருக்கு வலி தணிப்பு சிகிச்சை, 8 ஆயிரத்து 758 பேருக்கு உடற்பயிற்சி சிகிச்சை உள்பட மொத்தம் 1 லட்சத்து 18 ஆயிரத்து 153 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com