மேக்கோடு அரசுப் பள்ளி 100% தோ்ச்சி

களியக்காவிளை, மே 11:

பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வில், களியக்காவிளை அருகே மேக்கோடு அரசு உயா்நிலைப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளியில் தோ்வெழுதிய 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனா்.

மாணவி ஸ்டெபினா 479 மதிப்பெண்களும், மாணவா் அஜின்ராஜ் 468 மதிப்பெண்களும், மாணவி ஜினிகா 454 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா். அஜின்ராஜ், அா்ஷினி ஆகியோா் கணிதத்தில் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். மாணவா்-மாணவிகளை தலைமையாசிரியா் மா. ஜெயராஜ், ஆசிரியா், ஆசிரியைகள் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com