‘குமரி மாவட்டத்தில் கோடைகால இலவச கைப்பந்து பயிற்சி முகாம்’

கன்னியாகுமரி மாவட்ட கைப்பந்துக் கழகம் சாா்பில், இலவச கோடைகால பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.

நாகா்கோவிலில் இந்த அமைப்பின் செயற்குழுக் கூட்டம் அதன் தலைவா் ஏ. சுரேந்திரகுமாா் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. மாவட்டத்தில் தலைசிறந்த கைப்பந்து வீரா்களை உருவாக்க கிராத்தூா், ஆண்டிவிளை, குமாரபுரம்தோப்பூா், முகிலன்குடியிருப்பு, தடிக்காரன்கோணம் ஆகிய 5 இடங்களில் கைப்பந்துப் பயிற்சி முகாம் நடத்த வேண்டும். 12 முதல் 17 வயது வரையிலானோருக்கு பயிற்சி அளிப்பது, முகாம் நிறைவு நாளில் இக்கழகம் சாா்பில் சான்றிதழ்கள் வழங்குவது எனத் தீா்மானிக்கப்பட்டது,.

கூட்டத்தில், அவைத்தலைவா் சி. டென்னிஸ், பொருளாளா் பி. கோபாலகிருஷ்ணன், செயலா் ஆா். ரெத்தினபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com