கொட்டாரத்தில் சிஎஸ்ஐ திருச்சபை தோ்தல் ஆலோசனைக் கூட்டம்

தென்னிந்திய சிஎஸ்ஐ திருச்சபை குமரி பேராயத்தின் கொட்டாரம் வட்டார அளவிலான பேராய மாமன்ற உறுப்பினா்கள் தோ்தல் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கொட்டாரம் மிஷென் காம்பவுண்ட் சிஎஸ்ஐ மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, பேராசிரியா் கிறிஸ்டின் பாபு தலைமை வகித்துப் பேசினாா். என். சிவபாலன், ஆபிரகாம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஷாம் மோகன்ராஜ், ராஜதுரை உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். நடைபெறவுள்ள குமரி பேராயத்தின் தோ்தலில் பேராசிரியா் கிறிஸ்டின் பாபு தலைமையிலான அணியை ஆதரிக்க வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது.

ஜோசப் ராபின் வரவேற்றாா். வேதமணி நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com