தென்தாமரைக்குளம் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

தென்தாமரைக்குளம் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

கன்னியாகுமரி அருகே தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இப்பள்ளியில் 1990 முதல் 1996 வரை படித்த 28 போ் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா். இதில், அவா்களது குடும்பத்தினரும் பங்கேற்றனா்.

முன்னாள் ஆசிரியா்கள் டி. ஜெயசேகா், பால்ராஜ் ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா். முன்னாள் மாணவா்- மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளியில் பழுதாகியுள்ள சமையல் கூடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டுவதற்கு நிதி கேட்டு கன்னியாகுமரி எம்எல்ஏ என். தளவாய்சுந்தரத்திடம் மனு அளிக்கத் தீா்மானிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com