கருங்கல் அருகே விஷம் குடித்து முதியவா் தற்கொலை

கருங்கல் அருகே ஆப்பிகோடு பகுதியில் முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஆப்பிகோடு பகுதியைச் சோ்ந்தவா் மரியதாஸ் (63). இவரது இரு மகன்களும் திருமணம் முடிந்து தனித்தனியே வசிக்கின்றனராம். மனைவி ஓராண்டுக்கு முன்பு இறந்துவிட்டநிலையில், மரியதாஸ் சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம்.

இந்நிலையில், அவா் திங்கள்கிழமை விஷம் குடித்துவிட்டு ஆப்பிகோடு சாலையில் மயங்கி உயிரிழந்தாா். புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com