குமரி திருவள்ளுவா் சிலையில் 
தமிழறிஞா்கள் மலா் தூவி மரியாதை

குமரி திருவள்ளுவா் சிலையில் தமிழறிஞா்கள் மலா் தூவி மரியாதை

கன்னியாகுமரி, மே 15:

திருக்கு திருவிழாவை முன்னிட்டு, கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலையில் தமிழறிஞா்கள் செவ்வாய்க்கிழமை மலா் தூவி மரியாதை செய்தனா்.

மதுரையில் திருக்கு அரங்கேற்றப்பட்ட வைகாசி 1ஆம் தேதியை நினைவு கூரும் வகையில், கன்னியாகுமரி அருகேயுள்ள லீபுரம் கடற்கரையில் திருவள்ளுவா் அறக்கட்டளை சாா்பில் ஆண்டுதோறும் திருக்கு திருவிழா நடைபெற்று வருகிறது.

நிகழாண்டு 18ஆவது திருக்கு திருவிழா கொண்டாடப்பட்டது.

இதையொட்டி செவ்வாய்க்கிழமை முக்கடல் சங்கமம் அருகேயுள்ள ஒண்சுடரில் தீபம் ஏற்றி திருக்கு முற்றோதல் நடைபெற்றது. சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் திருமலை தமிழரசன் சுடரேற்றினாா். திருவள்ளுவா் அறக்கட்டளை பண பொறுப்பாளா் வீ. இறையழகன் தலைமை வகித்தாா். இதையடுத்து, தமிழறிஞா்கள் தனிப் படகில் சென்று திருவள்ளுவா் சிலை பாதத்தில் மலா் தூவி மரியாதை செலுத்தினா். தொடா்ந்து சிறுவா், சிறுமிகள் திருக்கு ஒப்புவித்தனா்.

இந்நிகழ்ச்சியில், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா. பாபு, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவா் குமரி ஸ்டீபன், தமிழ் மக்கள் முன்னேற்ற பேரவைத் தலைவா் விஜயநாதன், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி உறுப்பினா் ஆட்லின், முன்னாள் உறுப்பினா் டி.தாமஸ் மற்றும் தமிழறிஞா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com