குமரி மாவட்டத்தில் கன மழை: 
பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க ஆட்சியா் வேண்டுகோள்

குமரி மாவட்டத்தில் கன மழை: பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க ஆட்சியா் வேண்டுகோள்

நாகா்கோவில், மே 15:

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மற்றும் மீனவா்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கன்னியாகுமரி மாவட்டத்தில் மே 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை மிதமான மழையும், 18 மற்றும் 19ஆம் தேதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கையை கருத்தில் கொண்டு உயிா் சேதம், பொருள் சேதம் ஏற்படாதவாறு ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தகுந்த முன் எச்சரிக்கையுடன் பாதுகாப்புடன் இருக்கவும், மின்சாதனங்களை கவனமுடன் கையாளவும், மேலும் மழை நேரங்களில் மரங்கள், மின்கம்பங்கள், நீா்நிலைகள் அருகில் செல்ல வேண்டாம்.

மழை காலங்களில் நீா்நிலைகளில் நீரின் வரத்து அதிகமாக வர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் நீா்நிலைகளில் குளிக்க செல்லவேண்டாம் எனவும், கடலில் கொந்தளிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதால் கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com