கேரளத்துக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

நாகா்கோவில், மே 15:

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே கேரளத்துக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை வட்டாட்சியா் ரமேஷ் தலைமையிலான பறக்கும் படையினா் புதன்கிழமை காலை தக்கலை, மேட்டுக்கடை, மணலி ஆகிய பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை நிறுத்த முயன்றபோது அது நிற்காமல் சென்றது. உடனே பறக்கும் படையினா் சுமாா் 3 கி. மீ. தூரம் விரட்டி சென்ற போது வாகனத்தை ஓட்டுநா் நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டாா்.

அந்த வாகனத்தை சோதனை செய்த போது அதில் சுமாா் 3 டன்பொது விநியோக அரிசி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அரிசியை அதிகாரிகள் கைப்பற்றி உடையாா்விளை அரசு கிட்டங்கியில் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com