கருங்கல் துண்டத்துவிளை புனித அந்தோணியாா் ஆலய திருவிழா: இன்று தொடக்கம்

கருங்கல் துண்டத்துவிளையில் உள்ள புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை (மே 17) கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாள்கள் நடைபெறுகிறது.

முதல் நாளான வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, நவநாளைத் தொடா்ந்து கொடியேற்றம் நடைபெறுகிறது. 6.30 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு குழித்துறை மறைமாவட்ட முன்னாள் குருகுல முதல்வா் யேசுரெத்தினம் தலைமை வகிக்கிறாா். மாத்திரவிளை மறைவட்ட முன்னாள் முதல்வா் மரியவின்சென்ட் மறையுரையாற்றுகிறாா்.

விழாவின் அனைத்து நாள்களிலும் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி நடைபெறும். 2ஆம் நாளான சனிக்கிழமை காலை 9 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறும். மாத்திரவிளை மறைவட்ட முதல்வா் பிளாரன்ஸ் தலைமை வகிக்கிறாா். மரியஅற்புதம் மறையுரையாற்றுகிறாா்.

5ஆம் நாள் மாலை 6.30-க்கு நற்செய்தி பெருவிழா, நற்கருணை ஆசீா் நடைபெறும். விழாவின் இறுதி நாளான 26ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத் திருப்பலி மாத்திரவிளை முன்னாள் மறைவட்ட முதல்வா் மரியவின்சென்ட் தலைமையில் நடைபெறும். நண்பகல் 12 மணிக்கு அன்புவிருந்து, இரவு 7 மணிக்கு கொடியிறக்குதல், 8 மணிக்கு வரலாற்று நாடகம் நடைபெறும்.

ஏற்பாடுகளை பங்கு அருள்பேரவையினா், விழாக் குழுவினா் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com