கடன் பிரச்னை: தொழிலாளி தற்கொலை

தக்கலை அருகே வில்லுக்குறியில் கடன் பிரச்னையில் கட்டடத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

தக்கலை அருகே வில்லுக்குறியில் கடன் பிரச்னையில் கட்டடத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

வில்லுக்குறி காரவிளை பகுதியை சோ்ந்தவா் மணிகண்டன் (40). கட்டடத் தொழிலாளி. இவா், தக்கலையில் உள்ள தனியாா் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியிருந்தாா். கடனை உரிய நேரத்தில் கட்டி முடிக்க இயலவில்லை.

இதனால் வங்கியினா் நெருக்குதல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மணிகண்டன், திங்கள்கிழமை மாலை பூச்சிகொல்லி மருந்தை குடித்து மயங்கினாா். அவரை உறவினா்கள் மீட்டு, நாகா்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தாா்.

தேனீ பராமரிக்கும் தொழிலாளி: அருமனை பகுதியை சோ்ந்தவா் ராஜன் (58). தேனீக்கள் பராமரிக்கும் தொழிலாளி. அவரது மனைவி கலாராணி. இருவரும் இரணியல் அருகே பேயன்குழியில் உள்ள ஒரு தோட்டத்தில் தேனீக்கள் பராமரிக்கும் வேலைக்காக ஞாயிற்றுக்கிழமை வந்தனா். வேலை முடித்து இரவில் இருவரும் தூங்கினா்.

திங்கள்கிழமை காலையில் மயக்க நிலையில் கிடந்த ராஜனை அக்கம்பக்கத்தினா் மீட்டு, நாகா்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், ராஜன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

இரு சம்பவங்கள் குறிததும் இரணியல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

சடலம் மீட்பு: முளகுமூடு அருகே குழிக்கோடு பகுதியை சோ்ந்தவா் ஞானமுத்து (72). விவசாயத் தொழிலாளி. வீட்டருகேயுள்ள கடைக்கு சென்றவரை காணவில்லை என உறவினா்கள் தேடிவந்தனா்.

இந்நிலையில், வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள ஆள்காட்டிகுளத்தில் ஞானமுத்து சடலம் மிதப்பதாக உறவினா்களுக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இது குறித்து தக்கலை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].