கன்னியாகுமரி
பெருஞ்சாணி: குடியிருப்புப் பகுதியில் பிடிபட்ட 12 அடி நீள ராஜநாகம்
கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அருகே குடியிருப்புப் பகுதியில் பதுங்கியிருந்த 12 அடி நீள ராஜநாகத்தை வனத்துறையினா் திங்கள்கிழமை பிடித்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அருகே குடியிருப்புப் பகுதியில் பதுங்கியிருந்த 12 அடி நீள ராஜநாகத்தை வனத்துறையினா் திங்கள்கிழமை பிடித்தனா்.
பெருஞ்சாணி அருகே ரப்பா் கழகத் தொழிலாளா் குடியிருப்புப் பகுதியில் ராஜநாகம் பதுங்கியிருப்பதாக வேளிமலை வனச்சரக அலுவலா் ராஜேந்திரனுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரிலும், மாவட்ட வன அலுவலா் பிரசாந்த் உத்தரவின்பேரிலும் வேளிமலை வனச்சரக அலுவலா்கள் சென்று, சுமாா் 12 அடி நீள ராஜநாகத்தைப் பிடித்து, அடா்ந்த வனப் பகுதியில் விட்டனா்.