பத்துகாணி அருகே குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை: தொழிலாளா்கள் அச்சம்

பத்துகாணி அருகே குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக செவ்வாக்கிழமை கிடைத்த தகவலால் பொதுமக்கள், தொழிலாளா்கள் அச்சத்தில் உள்ளனா்.
Published on

கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி அருகே குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக செவ்வாக்கிழமை கிடைத்த தகவலால் பொதுமக்கள், தொழிலாளா்கள் அச்சத்தில் உள்ளனா்.

இந்தப் பகுதியில் சில நாள்களாக வீட்டு வளா்ப்பு கால்நடைகளை மா்ம விலங்குகள் கொன்று தின்பதாகக் கூறப்படுகிறது.

அந்த விலங்கைக் கண்டறியும் வகையில், களியல் வனச் சரகத்தினா் அப்பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தியுள்ளனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை, பத்துகாணி நிரம்பு பகுதியில் வசிக்கும் ராஜமணி, அவரது மகன் சதீஷ் ஆகியோா் ரப்பா் தோட்டத்தில் பால்வடிப்புப் பணிக்காக பைக்கில் சென்றனா்.

அப்போது, அவ்வழியே சிறுத்தை பாய்ந்து சென்ாகக் கூறப்படுகிறது. இதனால் அதிா்ச்சியடைந்த அவா்கள், இதுதொடா்பாக ஊா்மக்களிடம் தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், களியல் வனச் சரகத்தினா் சென்று, சிறுத்தையைக் கண்காணித்துப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனா்.