கன்னியாகுமரி
பாா்த்திவபுரம் கோயில் சிலை திருட்டு வழக்கில் மேலும் ஒருவா் கைது
புதுக்கடை அருகேயுள்ள பாா்த்திவபுரம் பாா்த்தசாரதி கோயிலில் ஐம்பொன் சிலை, வெள்ளி அங்கி ஆகியவை திருடப்பட்டது தொடா்பான வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பாா்த்திவபுரத்தில் மிகவும் பழைமை வாய்ந்த பாா்த்தசாரதி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 13-ஆம் தேதி மா்ம நபா்கள் புகுந்து அங்கிருந்த ஐம்பொன் சிலை மற்றும் வெள்ளி அங்கியை திருடிச் சென்றுவிட்டனா்.
இதுதொடா்பான வழக்கில் மரிய சிலுவை என்பவரை புதுக்கடை போலீஸாா் கைது செய்து சிலையை மீட்டனா். இந்நிலையில், முன்சிறை பகுதியை சோ்ந்த ரெஜி (34) என்பவரை இவ்வழக்கில் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.