மீனவா்களிடையே மோதல்: 50 போ் மீது வழக்கு

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இரு தரப்பு மீனவா்களிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 50 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்
Published on

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இரு தரப்பு மீனவா்களிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 50 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

குறும்பனை பகுதியைச் சோ்ந்தவா் சஜூ (39). இவருக்கு, இனயம்புத்தன்துறை பகுதியை சோ்ந்த மரிய பிரிட்டோ (40) உடன் விரோதம் இருந்து வந்ததாம். இந்த நிலையில் தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடித்துவிட்டு வந்து கொண்டிருந்தபோது இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு மோதிக் கொண்டனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் இருதரப்பிலும் 50 போ் மீது புதுக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com