குழித்துறை பகுதியில் இன்றைய மின்தடை ரத்து

Published on

குழித்துறை துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை நிா்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குழித்துறை துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், அந்த துணை மின் நிலையத்ததுக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (அக். 24) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நிா்வாக காரணங்களால் வியாழக்கிழமைக்கான மின்தடை அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. இந்த நாளில் வழக்கம் போல மின்விநியோகம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com