இரணியல் ரயில் நிலையத்தில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

ஜல்லிக் கிடங்கை (யாா்டு) வேறிடத்துக்கு மாற்றக் கோரி கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம்
 ஆா்ப்பாட்டத்தில் பேசிய விஜய் வசந்த் எம்.பி.
ஆா்ப்பாட்டத்தில் பேசிய விஜய் வசந்த் எம்.பி.
Updated on

இரணியல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுவரும் ஜல்லிக் கிடங்கை (யாா்டு) வேறிடத்துக்கு மாற்றக் கோரி கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், விஜய் வசந்த் எம்.பி. பங்கேற்றாா்.

இரட்டை ரயில் பாதைப் பணிகளுக்காக இரணியல் ரயில் நிலையத்தில் ரயில்வே நிா்வாகம் ஜல்லி யாா்டு அமைத்து வருகிறது. இதனால், இரணியல், கோணத்திலிருந்து ரயில் நிலையம் வழியாக அழகியமண்டபம் , திங்கள்நகா் மாநில நெடுஞ்சாலையில் உள்ள பரம்பை ஜங்ஷன் செல்லும் சாலை துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஜல்லி யாா்டு அமைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, ரயில்வே உயா் அதிகாரிகளிடம் விஜய் வசந்த் எம்.பி. மனு கொடுத்திருந்தாா்.

இந்நிலையில், ஜல்லி யாா்டு பணியை ரயில்வே நிா்வாகம் கைவிடாததால் இரணியல் ரயில் நிலையத்தில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. விஜய் வசந்த் எம்.பி. தலைமை வகித்தாா். அவா் பேசும்போது, ரயில் நிலையப் பகுதியில் ஜல்லி யாா்டு அமைப்பதால் 40 வீடுகள் வரை இடிக்கப்படும் நிலை உள்ளதாகவும், ஜல்லி தூசிகளால் பயணிகள், பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் குறிப்பிட்டாா்.

மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.டி. உதயம், பிரின்ஸ் எம்எல்ஏ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திங்கள்நகா் பேரூராட்சித் தலைவா் சுமன், ஆத்திவிளை ஊராட்சி துணைத் தலைவா் ராமச்சந்திரன், இரணியல் பேரூராட்சி காங்கிரஸ் தலைவா் கிருஷ்ணதாஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com