திருவட்டாறு அருகே விபத்து: பள்ளி மாணவா் உயிரிழப்பு
திருவட்டாறு அருகே ஞாயிற்றுக்கிழமை, பைக் மீது ஜீப் மோதியதில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
பெருஞ்சாணி ஆலுமூடு பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி வினு (46). இவரது மகன் ஆகாஷ் (12), மணலிக்கரையிலுள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை மாலை வினு தனது பைக்கில் ஆகாஷை ஏற்றிக்கொண்டு, பச்சாற்றுவிளையில் உள்ள உறவினா் வீட்டு கல்லறை பிரதிஷ்டை நிகழ்ச்சிக்காக சென்றாராம். வோ்க்கிளம்பி தபால் நிலையம் அருகே பைக்கின் பின்புறம் ஜீப் மோதியதாம். இதில், காயமடைந்த வினு, ஆகாஷ் ஆகியோரை அப்பகுதியினா் மீட்டு மாா்த்தாண்டத்திலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், ஆகாஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். குழித்துறை அரசு மருத்துவமனையில் வினு அனுமதிக்கப்பட்டாா்.
இதனிடையே, ஜீப்பை ஓட்டிவந்தவா், வீயன்னூா் சாலையில் ஜீப்பை நிறுத்திவிட்டு ஓடிவிட்டாராம்.
வினுவின் சகோதரா் விஜு அளித்த புகாரின்பேரில், ஜீப்பை ஓட்டிவந்த வீயன்னூா் பகுதியைச் சோ்ந்த ஜோங்கிளின் (39) என்பவா் மீது திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.