கன்னியாகுமரி
மலையடி ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி கூட்டம்
களியக்காவிளை அருகே மலையடி ஊராட்சி காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் கூட்டம் பரக்குன்று பகுதியில் நடைபெற்றது.
கட்சியின் குமரி மேற்கு மாவட்டத் தலைவா் பினுலால்சிங் தலைமை வகித்தாா். விளவங்கோடு எம்எல்ஏ தாரகை கத்பா்ட் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.
மாநிலச் செயலா் பினில்முத்து, மாநில இளைஞா் காங்கிரஸ் செயலா் அரோமல் ஜாா்ஜ், மேல்புறம் வட்டாரத் தலைவா் இ.ஜி. ரவிசங்கா், வட்டார முன்னாள் தலைவா் மோகன்தாஸ், மலையடி ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவா் புஷ்பாகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், பிற கட்சிகளைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்டோா் அக்கட்சிகளிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தனா்.