கன்னியாகுமரி
கராத்தே போட்டி: நாஞ்சில் கல்லூரி மாணவா் வெற்றி
கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி மாணவா் தங்கப்பதக்கம் பெற்றாா்.
குமரி மாவட்ட கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி அண்மையில் கருங்கல் தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை அறிவியல் கல்லூரியின் முதலாண்டு மாணவா் டிக்சன் ஜோஸ் 18 வயதிற்கு உள்பட்ட மாணவா்களுக்கான கட்டா போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் பெற்றாா். இக் கல்லூரி மாணவா் ஜெனீப் மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டியில் முதலிடம் பெற்றாா்.
வெற்றிபெற்ற மாணவா்களை கல்லூரி செயலா் அருள்தந்தை சி. ஸ்டீபன், கல்லூரி முதல்வா் அமலநாதன், உடற்கல்வி இயக்குநா்கள் லாரன்ஸ், அஜின், பெரோஸ் மற்றும் துறைத் தலைவா் விஜூ உள்ளிட்டோா் பாராட்டினா்.