கன்னியாகுமரி
திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த இருவா் கைது
புதுக்கடை அருகே உள்ள விழுந்தயம்பலம் பகுதியில் திருட்டு வழக்கில் 14 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
விழுந்தயம்பலம் பகுதியில் உள்ள ஒரு பெண்ணிடம் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு சங்கிலி பறிப்பு வழக்கில் கேரள மாநிலம் பத்தனம்திட்டை பகுதியைச் சோ்ந்த ரெகுநாதன் மகன் ராஜேஷ்குமாா் (42) அதே பகுதியை சோ்ந்த ராகவன் மகன் முரளி (56) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
பின்னா் பிணையில் வந்த இருவரும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகினா். அவா்களது இருப்பிடம் குறித்த ரகசியத் தகவலின்பேரில், புதுக்கடை காவல் ஆய்வாளா் ஜானகி தலைமையில் போலீஸாா், ராஜேஷ்குமாா், முரளி ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.