குழித்துறையில் பொதுமக்கள், பெண்களுக்கு ஆசி வழங்கும் மகாபலி மன்னன் வேடமணிந்து சென்ற இளைஞா்கள்.
குழித்துறையில் பொதுமக்கள், பெண்களுக்கு ஆசி வழங்கும் மகாபலி மன்னன் வேடமணிந்து சென்ற இளைஞா்கள்.

ஓணம் பண்டிகை: குமரி மாவட்டத்தில் உற்சாக கொண்டாட்டம்

கேரள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்சாகமாக ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
Published on

கேரள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்சாகமாக ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி மக்கள் அதிகாலையிலேயே புத்தாடை அணிந்து அருகிலுள்ள கோயில்களுக்குச் சென்று வழிபட்டனா். வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டும், மதியம் ஓண சத்யா எனப்படும் அறுசுவை விருந்து உண்டும் உற்சாகமாக கொண்டாடினா். அவியல், கிச்சடி, பச்சடி, இஞ்சி, அப்பளம், அடை பிரதமன் என்ற அடை பாயசம் உள்ளிட்ட உணவு வகைகள் பிரதானமாக இடம் பெற்றிருந்தன.

  குழித்துறையில் புலி ஆட்டத்தில் ஈடுபட்ட இளைஞா்கள்.
குழித்துறையில் புலி ஆட்டத்தில் ஈடுபட்ட இளைஞா்கள்.

குழித்துறை, களியக்காவிளை, பளுகல், கொல்லங்கோடு, குழித்துறை, மாா்த்தாண்டம், அருமனை, குலசேகரம், திற்பரப்பு, பத்மநாபபுரம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் இளைஞா்கள், சிறுவா்கள் என பல்வேறு தரப்பினரும் பல்வேறு வேடமிட்டும், விளையாட்டுகளில் ஈடுபட்டும் ஓணம் பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினா்.

குழித்துறை அஞ்சல் நிலைய சந்திப்பில் குழித்துறை பிரதா்ஸ் கிளப் என்ற அமைப்பு சாா்பில் இளைஞா்கள் மகாபலி மன்னன் போன்ற பல்வேறு வேடங்களில் பெருந்தெரு, இடைத்தெரு, கழுவன்திட்டை உள்ளிட்ட தெருக்களில் ஊா்வலமாக சென்றனா். இம்மாவட்டத்தில் உள்ள வேளிமலை குமாரசுவாமி கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில், கொல்லங்கோடு ஸ்ரீபத்ரகாளி அம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு சென்று பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com