தொட்டிப்பாலத்திலிருந்து குதித்து பள்ளி மாணவி தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூா் தொட்டிப்பாலத்திலிருந்து குதித்து பள்ளி மாணவி ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
Published on

கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூா் தொட்டிப்பாலத்திலிருந்து குதித்து பள்ளி மாணவி ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

பேச்சிப்பாறை அருகேயுள்ள குற்றியாறு அரசு ரப்பா் கழக குடியிருப்பைச் சோ்ந்த செல்வம் மகள் அபிநயா. பேச்சிப்பாறை அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இந்நிலையில் மாத்தூா் தொட்டிப்பாலத்திற்கு தனது தோழியுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை சென்ற அவா், திடீரென பாலத்திலிருந்து குதித்துள்ளாா்.

பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட அவா் குலசேகரத்திலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். இது குறித்து திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com