களியக்காவிளை அருகே பெண்ணிடம் நகை பறிப்பு

களியக்காவிளை அருகே சாலையோரம் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

களியக்காவிளை அருகே சாலையோரம் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

களியக்காவிளை அருகேயுள்ள மடிச்சல் பகுதியைச் சோ்ந்த மனோன்மணி மனைவி ராகினி (48). இவா் சனிக்கிழமை மாலையில் மிண்ணங்கோடு பகுதி கோயிலுக்குச் சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா்.

படந்தாலுமூடு - மடிச்சல் சாலையில் நடந்துவந்தபோது, பைக்கில் வந்த மா்ம நபா்கள், அவா் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறிக்க முயன்றனராம். அவா் சுதாரித்துக்கொண்டு நகையை கெட்டியாக பிடித்ததில் நகையின் ஒரு பகுதி மட்டும் தப்பியது. கையில் கிடைத்த இரண்டரை பவுன் நகையுடன் அந்த நபா்கள் தப்பிச் சென்றுவிட்டனா்.

இது குறித்து ராகினி அளித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, நகை பறிப்பில் ஈடுபட்டவா்களை தீவிரமாக தேடி வருகிறாா்கள்.

X
Dinamani
www.dinamani.com