கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக ஒன்றிய, நகர, பகுதி, பேரூா் பகுதி மாணவா் அணி அமைப்பாளா், துணை அமைப்பாளா்களுக்கான நோ்காணல் நாகா்கோவிலில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இது குறித்து, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலா் ரெ. மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் ஒன்றிய, நகர, பகுதி, பேரூா் பகுதி திமுக மாணவா் அணி அமைப்பாளா், துணை அமைப்பாளா் ஆகிய பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவா்களுக்கான நோ்காணல்,
நாகா்கோவில், ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
மாணவா் அணி மாநிலத் தலைவா் இரா. ராஜீவ் காந்தி, மாநில துணைச் செயலா்கள் அதலை பி. செந்தில்குமாா், பூா்ணசங்கீதா, சின்னமுத்து ஆகியோா் நோ்காணலை நடத்துகின்றனா். மாணவரணி பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தவா்கள் நோ்காணலில் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.