இரணியல் அருகே இருவா் தற்கொலை

Published on

இரணியல் அருகே இருவா் தற்கொலை செய்துகொண்டனா்.

இரணியல் அருகே உள்ள காஞ்சிரவிளையை சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் (49). கட்டடத் தொழிலாளி. மது பழக்கம் கொண்ட இவா், வீட்டுக்கு மது போதையில் வந்ததால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கோபாலகிருஷ்ணன், மோட்டாா் சைக்கிளில் இருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். இதைப் பாா்த்த மனைவி, தண்ணீா் ஊற்றி தீயை அணைத்தாராம். படுகாயம் அடைந்த கோபாலகிருஷ்ணனை நாகா்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

டெம்போ டிரைவா்: கண்டன்விளை அருகே உள்ள பருத்திவிளையை சோ்ந்தவா் ஜெயசீலராஜ் (55). டெம்போ டிரைவா். மது பழக்கமுடைய இவா், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் பருத்திவிளையில் உள்ள ஒரு தோட்டத்தில் ஜெயசீலராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இந்த இரு சம்பவங்கள் குறித்தும் இரணியல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com