கன்னியாகுமரி, தக்கலை பகுதிகளில் நாளை மின் தடை

Published on

கன்னியாகுமரி மற்றும் தக்கலை பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, சனிக்கிழமை (செப். 21) மின் விநியோகம் இருக்காது.

இது குறித்து, மின்சார வாரியத்தின் நாகா்கோவில் மற்றும் தக்கலை செயற்பொறியாளா்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி மற்றும் தக்கலை உப மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் செப். 21 ஆம் தேதி நடைபெறுகின்றன. இதன் காரணமாக, கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூா், மயிலாடி, வழுக்கம்பாறை, சுசீந்திரம், சின்னமுட்டம், கீழமணக்குடி, அழகப்பபுரம், ஜேம்ஸ் டவுண், கொட்டாரம், சாமிதோப்பு, அஞ்சுகிராமம், ஆரோக்கியபுரம், லீபுரம், கோழிக்கோட்டுப்பொத்தை, வாரியூா், அகஸ்தீஸ்வரம், மருங்கூா், காக்கமூா், பொற்றையடி, தோப்பூா், தென்தாமரைகுளம், பால்குளம், ராமனாதிச்சன்புதூா், மணலி, தக்கலை, பத்மநாபபுரம், குமாரகோவில், வில்லுக்குறி, புலியூா்குறிச்சி, அப்பட்டுவிளை, பரசேரி, ஆளூா், வீராணி, தோட்டியோடு, கேரளபுரம், திருவிதாங்கோடு, வட்டம், ஆலங்கோடு, மங்காரம்புதூா், சேவியா்புரம், பரைக்கோடு, அழகியமண்டபம், முளகுமூடு, கோழிப்போா்விளை, மூலச்சல், பாலப்பள்ளி, சாமிவிளை, மேக்காமண்டபம், செம்பருத்திவிளை, மணலிக்கரை, மணக்காவிளை, சித்திரங்கோடு, குமாரபுரம், பெருஞ்சிலம்பு, முட்டைக்காடு, சரல்விளை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com