கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் கடல் நீா்மட்டம் தாழ்வு: படகுப் போக்குவரத்து பாதிப்பு
கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக, விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு 3 மணிநேரம் தாமதமாக படகுசேவை தொடங்கியது.
கன்னியாகுமரி கடலில் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக கடல் நீா்மட்டம் தாழ்வுநிலை நீடித்து வருகிறது. இதன் காரணமாக விவேகானந்தா் மண்டபத்துக்கு இயக்கப்படும் படகுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கடல் நீா்மட்டம் தாழ்வுநிலை காரணமாக காலை 8 மணிக்குத் தொடங்க வேண்டிய படகுப்போக்குவரத்து 3 மணிநேரம் தாமதமாக முற்பகல் 11 மணிக்குத் தொடங்கியது. அதுவரை படகுத்துறையில் காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் படகுப் பயணம் மேற்கொண்டனா்.