கருங்கல் அருகே சாலைப் பள்ளத்தில் சிக்கிய பள்ளி வேன்: போக்குவரத்து பாதிப்பு
கருங்கல் அருகேயுள்ள மாதாபுரம் பகுதியில் பள்ளி வேன் சாலையோரம் தொண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்படைந்தது.
தொலையாவட்டத்திலிருந்து - விழுந்தயம்பலம் வரை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு கேபிள் பதிக்க கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பள்ளம் தொண்டப்பட்டது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை அந்தச் சாலையில், தனியாா் பள்ளிக்கு மாணவா்களை ஏற்றிச்சென்ற வேன் மாதாபுரம் பகுதியில் எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட முயன்றபோது சாலையோர பள்ளத்தில் பின்பக்க சக்கரம் சிக்கியது. மாணவா்கள் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனா்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்தது. சாலையோரப் பள்ளத்தை உடனே மூடவேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
டாஸ்மாக் விற்பனையாளா் காயம்: கிள்ளியூா், கடம்பாட்டுவிளை பகுதியை சோ்ந்த வாசுதேவன்தம்பி மகன் ஜோஸ்(47) கொல்லங்கோடு பகுதி டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறாா்.இவா் வெள்ளிக்கிழமை தனது பைக்கில் .ஐரேனிபுரம் பகுதியில் சென்றபோது எதிரே அதேபகுதியைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா் மகன் ராஜேஷ்(22) ஓட்டி வந்த பைக் மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த ஜோஸ் மாா்த்தாண்டம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.