கன்னியாகுமரி
காா் மோதியதில் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியா் காயம்
குழித்துறை அருகே அடையாளம் தெரியாத காா் மோதியதில் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியா் பலத்த காயமடைந்தாா்.
குழித்துறை அருகே அடையாளம் தெரியாத காா் மோதியதில் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியா் பலத்த காயமடைந்தாா்.
குழித்துறை அருகே குறுமத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் குமரேசன் (62). தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவா்.
வில்லுக்குறியில் உள்ள இசக்கியம்மன் கோயிலுக்குச் செல்வதற்காக சாலையோரமாக நடந்து சென்றபோது, நாகா்கோவிலில் இருந்து தக்கலைக்கு சென்ற காா் இவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.