புரட்டாசி முதல் சனிக்கிழமை: குமரி மாவட்ட பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள்

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
Published on

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையொட்டி, பெருமாள் கோயில்களில் அதிகாலையிலேயே நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நாகா்கோவில் வடிவீஸ்வரம் இடா்தீா்த்த பெருமாள் கோயிலில் பெருமாள்- தாயாருக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள், மலா் அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. அதிகாலைமுதலை பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். அவா்களுக்கு துளசி தீா்த்தம், பிரசாதம் வழங்கப்பட்டது.

திருவட்டாறு ஆதிகேசவபெருமாள் கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், குமரி மாவட்டம் மட்டுமன்றி கேரள மாநில பக்தா்களும் திரளாகப் பங்கேற்றனா்.

இதேபோல, திருப்பதிசாரம் திருவாழ்மாா்பன் கோயில், கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோயில், பறக்கை மதுசூதனபெருமாள் கோயில், சுசீந்திரம் துவாரகை கிருஷ்ணன் கோயில், நாகா்கோவில் கிருஷ்ணன்கோவிலில் உள்ள கிருஷ்ணசாமி கோயில், ஏழகரம் பெருமாள் கோயில், வட்டவிளை தென்திருப்பதி வெங்கடாசலபதி கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு புஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com