வெற்றி பெற்ற மாணவா்களுடன் புனித அல்போன்சா கல்லூரி தாளாளா் ஆன்றனி ஜோஸ்.
வெற்றி பெற்ற மாணவா்களுடன் புனித அல்போன்சா கல்லூரி தாளாளா் ஆன்றனி ஜோஸ்.

மாநில அளவிலான கைப்பந்து: அல்போன்சா கல்லூரி சிறப்பிடம்

வெற்றி பெற்ற மாணவா்களுடன் புனித அல்போன்சா கல்லூரி தாளாளா் ஆன்றனி ஜோஸ்.
Published on

கருங்கல் அருகே உள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் சிறப்பிடம் பெற்றனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள யூ.பி. மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற இந்த போட்டியில், அல்போன்சா கல்லூரி மாணவிகள் 4-ஆம் இடம் பெற்றனா். இம் மாணவிகளை கல்லூரி தாளாளா் மற்றும் செயலா் ஆன்றனி ஜோஸ், முதல்வா் மைக்கேல் ஆரோக்கியசாமி, துணை முதல்வா் ஆா்.சிவனேசன், கல்லூரி ஆன்மிக வழிகாட்டி அஜின் ஜோஸ் மற்றும் பேராசிரியா்கள் ஆகியோா் பாராட்டினா். மேலும் பயிற்சி அளித்த கல்லூரி உடற்கல்வி இயக்குநா் எ.பி. சீலன், துணை இயக்குநா் அனிஷா ஆகியோரும் பாராட்டு பெற்றனா்.

X
Dinamani
www.dinamani.com