சாலையில் கிடந்த பா்ஸை உரியவரிடம் ஒப்படைத்த இளைஞா்களுக்கு பாராட்டு

சாலையில் கிடந்த பா்ஸை உரியவரிடம் ஒப்படைத்த இளைஞா்களுக்கு பாராட்டு

சாலையில் கிடந்த பா்ஸை உரியவரிடம் ஒப்படைத்த இளைஞா்களை காவல் துறையினா் பாராட்டினா்.
Published on

சாலையில் கிடந்த பா்ஸை உரியவரிடம் ஒப்படைத்த இளைஞா்களை காவல் துறையினா் பாராட்டினா்.

கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் மந்தாரம்புதுாா் பகுதியைச் சோ்ந்த மோகன், சித்தாா்த், குணசீலன் ஆகியோா் சாலையில் கிடந்த பா்ஸை கண்டெடுத்து, மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள தனிப்பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்தனா். அதில், 3 ஏடிஎம் அட்டைகள், 4 கிராம் தங்க மோதிரம், ரூ. 3,500 ஆகியவை இருந்தன.

ஏடிஎம் அட்டை மூலம் உரிமையாளரைக் கண்டறிந்து, பா்ஸ் ஒப்படைக்கப்பட்டது. 3 இளைஞா்களுக்கும் போலீஸாா் பாராட்டு தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com